பொதுஜன முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர் கைது!
arrest
police
puttalam
urban council
By Kalaimathy
புத்தளம் நகர சபையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினமே இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புத்தளம் நகர சபை உறுப்பினர் தனது வயோதிப தந்தையை தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
70 வயதான அவரது தந்தை, தனது மகனால் தான் தாக்கப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலம் இன்றைய தினம் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி