கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது
புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கேரள கஞ்சா தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் னாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (18.10.2026) மாலை புத்தளம், தில்லடிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லடிய பகுதியில் இருந்து புத்தளம் நகருக்கு கேரள கஞ்சாவைக் கடத்திச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்திப் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.
கேரள கஞ்சா
இதன்போது, மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரான நகுலேஸ்வரன் எனப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் சிறிலங்கா முஸ்லிம் கட்சியின் வேட்பாளராகவும் செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஆகியன இன்று (19) புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |