மீண்டும் எரிபொருளுக்காக நீண்ட வரிசை!
புத்தளம் பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் மாத்திரமே பெற்றோல் வழங்கப்பட்டது.
பெற்றோல் வழங்கும் நடவடிக்கை இன்று காலை முதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது QR குறியீட்டின் மூலம் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது. பெற்றோலைப் பெறுவதற்கு மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
கடந்த பல மாதங்களாக எரிபொருள் கிடைக்காது மக்கள் பல நாட்களாக வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக்கொண்டனர்.
மீண்டும் வரிசை

எரிபொருள் மாத்திரமல்லாது பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்ததோடு, தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டங்களின் உச்சக்கட்டமாக அப்போதைய அதிபர் கோட்டாபய நாட்டை விட்டே விரட்டப்பட்டார்.
அதனையடுத்து ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க ஓரளவுக்கு எரிபொருள் நெருக்கடியை தணித்து மக்களுக்கு வாராவாரம் QR முறையில் எரிபொருள் கிடைக்குமளவிற்கு வழிவகுத்துள்ளார்.
இவ்வாறான நிலையிலலேயே பல காலங்களின் பின்னர் இன்றைய தினம் புத்தளத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.