தொடரும் இணைய மோசடிகள்: அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (30) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த குழுவில் 44 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குவதாக பதில் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அந்தவகையில், புத்தளம் (Puttalam) , கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகநபர்கள் இயங்கி வந்ததாக தெரிவித்த அவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய காவல்துறை அந்த ஹோட்டலை சுற்றிவளைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தச் சோதனையின் போது 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணனிகள் மற்றும் பல ஐ.எஸ்.எம் அட்டைகள் காவல்துறையினர் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இரு சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 10 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்: உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |