புலம் பெயர்ந்து தாயகம் திரும்பியவர்களுக்கான வாழ்வாதார உதவி மதிப்பீடு
ஜப்பான் (Japan) நாட்டின் நிதி உதவியுடன் சர்வதேச புலம்பெயர்தலுக்கான நிறுவனம் (IOM) இணைந்து வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களுக்கும் நலிவுற்ற குடும்பங்களுக்குமான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முதற்கட்ட செயற்பாட்டு மற்றும் மதீப்பீடு தொடர்பிலான நிகழ்வொன்று திருகோணமலையில் (Trincomalee) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று (30) நடைபெற்றுள்ளது.
இதன்போது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை அடையாளப்படுத்துவதற்கான தரவு சேகரித்தல் மற்றும் கணிப்பீடு நடவடிக்கைகளுக்காக "EML" நிறுவனம் மூலமான பயிற்சிகள் இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக வழங்கப்பட்டது.
பிரதேச செயலகப் பிரிவு
குழு ரீதியான வாழ்வாதாரச் செயற்பாட்டை முன்னெடுப்பது தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
தம்பலகாமம், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த நலிவுற்ற மற்றும் புலம்பெயர்ந்து நாடு திரும்பிய சுமார் 81 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வளவாளராக சட்டத்தரணி பி.முகுந்தன் உட்பட குறித்த நிறுவனத்தின் முகாமையாளர், ஒருங்கிணைப்பாளர் என பலர் திறம்பட பயிற்சியளித்தனர்.
மேலும், EML ஆலோசனை நிறுவன உத்தியோகத்தர்கள், சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் திட்ட இணைப்பாளர் எம்.மேரி, வி.சசிகாந் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |