இலங்கைக்கு விமான சேவையை அதிகரிக்கும் நாடு -வந்து குவியவுள்ள பயணிகள்
Bandaranaike International Airport
Sri Lanka
Qatar
By Sumithiran
கத்தாரின் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ், ஜூன் மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் தனது நாளொன்றுக்கான தினசரி ஐந்தாவது சேவையை 22 ஜூன் 2023 முதல் தொடங்கவுள்ளது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) படி, கூடுதல் சேவை உலகளவில் 160 இடங்களுக்கு இணைப்பை வழங்கும்.
வாரத்திற்கு சுமார் 21,000 பயணிகளை
தற்போது, கட்டார் எயார்வேஸ் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வாரத்திற்கு சுமார் 21,000 பயணிகளைக் கையாளுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் கத்தார் ஏர்வேஸின் சேவை அதிகரிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ஏஏஎஸ்எல்(AASL) தெரிவித்துள்ளது.
