கொழும்பில் புறப்பட்ட விமானத்தில் பழுது! மீண்டும் தரையிறக்கம்
Bandaranaike International Airport
Sri Lanka
Qatar
By Shalini Balachandran
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) இருந்து புறப்பட்ட கட்டார் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று(03) மதியம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ350-900 ரக விமானம் தோஹா செல்லும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறங்கியுள்ளது.
இயந்திரக் கோளாறு
சக்கர அமைப்பில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுதான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
விமானத்தின் சக்கர பகுதி சரியாக இயங்காத காரணத்தால் அதனை சீர்ப்படுத்தும் வரை விமானத்தை நிறுத்த பொறியியல் பிரிவினர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி