பிரித்தானிய மகா ராணியின் உருவம் கொண்ட நாணயத் தாள்கள் தொடர்பில் இங்கிலாந்து வங்கியின் அறிவித்தல்
நாணயத்தாள்
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதைத் தொடர்ந்து, எலிசபெத் மகாராணியின் படத்தைக் கொண்ட நாணயத் தாள்கள் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்று இங்கிலாந்து வங்கி அறிவித்தது.
மாட்சிமை ராணியின் உருவம் கொண்ட தற்போதைய நாணயத் தாள்கள் தொடர்ந்து செல்லத்தக்கவை இந்நிலையில், விரைவில் நாணயத் தாள்கள் தொடர்பான கூடுதல் அறிவிப்பு வெளியிடப்படும் என இங்கிலாந்து வங்கி அறிவித்துள்ளது.
இங்கிலாந்து வங்கி நாணயத் தாள்களில் தோன்றிய முதல் மன்னர் ராணி எலிசபெத் ஆவார் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்
ராணியின் மரணம் குறித்து நான் அறிந்தது முதல் பிரித்தானியா முழுவதும் சோத்தில் ஆழ்ந்துள்ளது.
வங்கியில் உள்ள அனைவரின் சார்பாக அரச குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன்" என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி குறிப்பிட்டார்.
ராணி எலிசபெத் தனது 96வது வயதில் வியாழன் அன்று ஸ்காட்லாந்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமை ராணியை சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய மன்னராக ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ்
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ், பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், ஐக்கிய இராச்சியம் மற்றும் 14 கொமன்வெல்த் நாடுகளின் மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS