எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு! பிரித்தானியாவிற்கு பயணமானார் ரணில்
பயணம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் அதிபர் பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.
அதிபராக பதவியேற்றதன் பின் முதலாவது விஜயம்
அதிபராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது.
இறுதி சடங்கில் கலந்து கொண்ட பின்னர் அதிபர் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வரலாற்றுப் புத்தகத்தில் ரணில்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணைவதற்கான அரிய வாய்ப்பு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்குக் கிடைக்கவுள்ளது.
எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட தம்பதிகளின் மகனான ரணில் விக்ரமசிங்க, எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளார்.
உலக வரலாற்றில் அரச குடும்பத்திற்கு வெளியே இவ்வாறானதொரு வாய்ப்பைப் பெற்ற முதல் நபர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
மகாராணியின் முடிசூட்டு விழாவின் போது, இலங்கையின் அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கு நடந்த ஒரு சிறப்பு நிகழ்வு குறித்தும் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருந்தார்.
அந்த வகையில் ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்று ராணியின் இறுதி ஊர்வலத்தில் இலங்கை மக்கள் சார்பாக கலந்துகொள்ளவுள்ளார்.
