சிறப்பு வாய்ந்த ஒரு நகையுடன் அடக்கம் செய்யப்படவுள்ள மகாராணி இரண்டாம் எலிசபெத்
மகாராணி
ராணியார் இரண்டாம் எலிசபெத் தமக்கு மிகவும் நெருக்கமான சிறப்பு வாய்ந்த ஒரு நகையுடன் அடக்கம் செய்யப்படுவார் என்று அரச நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.
ராணியாரின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஏதிர்வரும் புதன்கிழமை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இதன்போது அவரது உடல் கிடத்தப்பட்டுள்ள பெட்டியானது பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரச குடும்பத்துக்கு சொந்தமான பொருட்களால் அலங்கரிக்கப்படவுள்ளது.
இளவரசியிடம் ஒப்படைக்கப்படும் நிச்சயதார்த்த மோதிரம்
ராணியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது கண்டிப்பாக சிறப்பு வாய்ந்த ஒரு நகையுடன் அடக்கம் செய்யப்படுவார் என லிசா லெவின்சன் கணித்துள்ளார்.
அது எதுவாக இருக்கும் என்பது அரண்மனை வட்டாரத்தில் இருந்து வெளியிடப்படலாம் அல்லது ரகசியம் காக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராணியாரின் நிச்சயதார்த்த மோதிரமானது இனி இளவரசி ஆன் கைவசமிருக்கும் என கூறப்படுகிறது.
பார்வைக்கு வைக்கப்படும் கிரீடம், மற்றும் செங்கோல்
ராணியாரின் தனிப்பட்ட நகைகள் சேகரிப்பில் 300 பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் 98 உடை ஊசிகள், 46 நெக்லஸ்கள், 34 ஜோடி காதணிகள், 15 மோதிரங்கள், 14 கைக்கடிகாரங்கள் மற்றும் ஐந்து பதக்கங்கள் உட்படும் என கூறுகின்றனர்.
அத்துடன், ராணியாரின் கிரீடம், மற்றும் செங்கோல் உள்ளிட்டவையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது