தமிழரின் சுதந்திரத்தை எந்த அரசாங்கமும் பெற்றுக்கொடுக்கவில்லை! வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு
By Dharu
யுத்தம் நடைபெற்று பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழர்களுக்கான சுதந்திரத்தை எந்த அரசாங்கத்தாலும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என சைவ சமயத் தலைவர்களில் ஒருவரான நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற கரிநாள் பேரணியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியள்ளார்.
அத்தோடு, இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறை நீதிக்கு எதிராகவே செயற்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
முடக்கப்படும் வழக்குகள்
இவ்வாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள்ளே வழக்குகள் கொண்டு செல்லப்பட்டு முடக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
21.24
மேலும், ஜனநாயகத்துக்காக குரல்கொடுப்பவர்கள் இன்று சிறையில் அடைக்கப்படுகின்றனர் எனவும் வேலன் சுவாமிகள் கூறியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி