நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாச

Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan political crisis
By Kiruththikan Nov 10, 2022 10:26 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார். 

இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் மாற்றுத்திறனாளிகள். இந்நாட்டிலுள்ள பொது வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்,அதாவது மருத்துவ வசதிகள்,கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளைப் பெறுவதில் அவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் திறன்கள் அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் பொதுவான குடிமக்களை இலக்காகக் கொண்ட அனைத்து நலன் மற்றும் மேம்பாட்டு செயல்முறைகளிலும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கு மாற்றுத்திறனாளிகள் சமூகம் எதிர்நோக்கும் பௌதீக மற்றும் கொள்கை ரீதியான தடைகள் அகற்றப்பட வேண்டும்.அவ்வாறே,மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் சவால்களை சமாளிக்க அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்.

இதன் பிரகாரம்,இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி,பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாச | Question Opposition Sajith Under Standing Orders

01. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயல்திட்டம் 2020 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அப்போதைய பொறுப்பான அமைச்சர் 2020.02.06 ஆந் திகதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த செயல்திட்டம் இது வரை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

02. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 33 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின் பிரகாரம் திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் யாது? இதனை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறதா? அவ்வாறு எதிர்பார்க்கும் பட்சத்தில் எப்போது சமர்ப்பிக்கப்படும்?

03. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற சைகை மொழி அவசியமாகும்.தற்போது வரைவு செய்யப்பட்ட சைகை மொழிச் சட்டமூலம் ஏன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை? இந்த சட்டமூலம் எப்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது?

04. இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்? அந்த எண்ணிக்கை போதும் என்று அரசாங்கம் கருதுகிறதா? அவ்வாறில்லாவிட்டால் எதிர்காலத்தில் அரச சேவைக்கு சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

05. சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் பாடசாலை கல்வியைப் பெறுவதற்கு அரசாங்கத்திடமுள்ள திட்டம் என்ன? இந்த குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க போதுமான சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்களா? பாடசாலை கல்விக்குப் பிறகு இந்தக் குழந்தைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்த அரசாங்கத்திடமுள்ள திட்டம் யாது?

06. அணுகல் வசதிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் சமூகம் அரச நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது அரசாங்கத்திற்கு தெரியுமா? அவ்வாறெனில்,அதற்காக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? எதிர்கால கட்டிட கட்டுமானத்திற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மாற்றுத்திறனாளி சமூகத்தின் அணுகல் வசதிகள் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்ற விதிகளை கொண்டு வர அரசாங்கம் செயல்படுமா?

07. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.5000/- உதவித்தொகையை சமுர்த்தி வங்கிகள் ஊடாக மாத்திரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை யாது? இந்தக் கொடுப்பனவை சமுர்த்தி வங்கியின் ஊடாக மாத்திரம் வழங்குவதன் மூலம் மாற்றுத்திறனாளி சமூகம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளனர் என்பது அரசாங்கத்திற்கு தெரியுமா? இதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாது? என நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024