இலத்திரனியல் கடவுச்சீட்டு குறித்து வெளியான தகவல்
இலத்திரனியல் கடவுச்சீட்டு குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் (Department of Immigration & Emigration) அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலைமனுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விலைமனுக்கோரலுக்கான அழைப்பு 7 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு விநியோகம்
இதற்கிடையில், ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள் தாமதமின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை தினமும் சுமார் 3,150 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
