அயர்லாந்தில் சரமாரியாக தாக்கப்பட்ட இந்தியர்: தொடரும் பதற்றம்
அயர்லாந்தில் (Ireland) மீண்டும் ஒரு இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அயர்லாந்தில் வாழும் இந்திய வம்சாவளி தொழிலதிபரான சந்தோஷ் (Dr Santosh Yadav) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தனது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே, ஆறு பதின்மவயதினர் தன்னைத் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர் தாக்குதல்
தனது தலை, முகம், கழுத்து, நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் அவர்கள் சரமாரியாகத் தாக்கியதாகவும், தன் தாடை எலும்பு உடைந்துள்ளதாகவும், சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி தாக்கப்பட்டது தான் மட்டும் அல்ல என்றும், சமீப காலமாக இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
