தம்பிலுவிலுக்கு கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர்!
தம்பிலுவில் பொது மயானத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் குற்றப்பலனாய்வுப்பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜுட் எனும் சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நபரொருவரை கொலை செய்து அப்பகுதியில் புதைத்துள்ளதாகத்தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்கமைய இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அடையாளங்காணப்பட்ட பல இடங்கள்
அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானம் இவ்வாறு ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளங்காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டுள்ளது.
இதன் போது, மட்டக்களப்பு சிறைச்சாலையில் மற்றுமொரு வழங்கில் தனது தாயைக்கொன்றதற்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருபவரும் கடந்த 2005ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாகச்செயற்பட்ட அனோசியஸ் சுரேஸ்கண்ணா எனப்படும் ஜுட் எனும் சந்தேக நபர் குறித்த பொது மைதானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரபப்ட்டிருந்தார்.
மட்டக்களப்பினைப் பிறப்பிடமாகக்கொண்ட அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராகச் செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த பொது மைதானத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி குற்றப்பலனாய்வுப்பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதற்கமைய குறித்த பொது மைதானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் உத்தரவிற்கமைய குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.
இதன்போது, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி எஸ்.எம்.றியாஸ் உட்பட் பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பொலிஸார் எனப்பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இனிய பாரதி
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இனிய பாரதி என அழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் நெருங்கிச்செயற்பட்ட ஒருவராவார்.
கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் ஆகிய சம்பவங்கள் தொடர்பில் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பல இடங்கள் அடையாளங்காணபபட்டுள்ள நிலையில், பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2007ம் ஆண்டு ஜூன் 28ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இனியபாரதி மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் கடந்த ஜூலை 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதிகளில் வைத்து குற்றப்புலனாய்வுப் யினரால் கைது செய்யப்பட்டனர்.
இக்கைதைத்தொடர்ந்து, இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச்சேர்ந்த 'தொப்பி மனாப்' என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச்சேர்ந்த 'ஜுட்' என அழைக்கப்படும் ரமேஷ் கண்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா
