ரபா எல்லைக் கடப்பு பலஸ்தீனர்களின் உயிர்நாடி: செஞ்சிலுவைச் சங்கம்
ரபா((Rafa) ) எல்லைகடப்பு பலஸ்தீனர்களின்(Palestinians) ஒரு முக்கிய உயிர்நாடியென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின்(International Committee of the Red Cross) பொதுச் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெகன் சபாஜியன்(Jagan Chapagain) தெரிவித்துள்ளார்.
ரபா எல்லைக் கடக்கும் நடவடிக்கைகளில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் நூறாயிரக்கணக்கான பலஸ்தீனியர்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதில் இடையூறு ஏற்படும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில்(Twitter) ஜெகன் சபாஜியன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ரபா எல்லைக் கடப்பு
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், எகிப்துடனான(Egypt) ரபா எல்லைக் கடக்கும் நடவடிக்கைகளில் தற்போது பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
ரபா எல்லைக் கடப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக செயல்படுவதுடன் உணவு, குடிநீர், சுகாதாரம், மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் பற்றாக்குறை உள்ளது.
இஸ்ரேலிய இராணுவம்
இன்று இஸ்ரேலிய இராணுவம் எல்லைக் கடப்பைக் கைப்பற்றி மூடியதுடன் காசாவுக்கான உதவி நுழைவைத் துண்டித்தது. அனைத்து பணயக்கைதிகளையும் பாதுகாப்பாக விடுவிக்கவும், பொதுமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வசதிகள் மற்றும் காசா பகுதி முழுவதும் உள்ள செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளுக்கான தடையற்ற அணுகலுக்காகவும் அனைத்து தரப்பினரையும் நான் அவசரமாக கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், உயிர்களைக் காப்பாற்றுங்கள் மற்றும் துன்பத்தைப் போக்குங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
I am deeply concerned by the escalation of hostilities in Rafah, putting many lives at risk.
— Jagan Chapagain (@jagan_chapagain) May 7, 2024
The Rafah border crossing serves as a vital lifeline, and any threat to its operations will hamper the delivery of life-saving humanitarian aid into Gaza.
With over a million people,…