பாலியில் எலோன் மஸ்க்கை சந்தித்த ரணில்
Ranil Wickremesinghe
Elon Musk
Indonesia
World
By Shalini Balachandran
பாலியில் எலோன் மஸ்க்குடன் (Elon Musk) அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, ஸ்டார் லிங்க் நெட்வொர்க்குடன் இலங்கை இணைக்கப்பட்டுள்ளது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் பாலியில் நடைபெறும் பத்தாவது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ரணில் இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார்.
உலக தண்ணீர் மாநாடு
இந்தோனேசியாவின் (Indonesia) பாலி நகரில் பத்தாவது உலக தண்ணீர் மாநாடு மே 18 முதல் 20 வரை நடைபெறுகின்ற நிலையில் மேற்படி விஜயமானது நேற்று (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அதிபரின் காலநிலை விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் எலோன் மஸ்க் உடனான ரணிலின் சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்