வெளிநாடொன்றில் நிலவை விட பிரகாசமான விண்கல்...! இணையத்தில் பகிரப்படும் காணொளி
போர்த்துக்கல் (Portugal) நாட்டில் நிலவை விட பிரகாசமான விண்கல் ஒன்று வானில் இருந்து பூமியை நோக்கி பாய்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
ஸ்பெயின் (Spain) மற்றும் போர்த்துக்கல் (Portugal) நாடுகளுக்கு இடையேயான வானத்தை நேற்று சனிக்கிழமை (18.05.2024) அதிகாலை 1.45 மணியளவில் இந்த விண்கல் கடந்து சென்றுள்ளது.
பிரகாசமான நீல ஒளி
விண்கல் காரணமாக பிரகாசமான நீல ஒளியால் ஒளிரும் வானம் இரவை பகல் போன்று மாற்றியது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
?? Meteor streaking across the sky in Portugal pic.twitter.com/kXAbY7dsue
— Quick News Alerts (@QuickNewsAlerts) May 19, 2024
பூமியின் வளிமண்டலத்தில் மணிக்கு 61,000 கிமீ வேகத்தில் நுழைந்த விண்கல் எவோரா மாவட்டத்தின் ஃபோரோஸ் டி வால்லே ஃபிகுரா பகுதியில் 91 கிமீ உயரத்தில் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் இணையவாசிகள் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |