கையெழுத்திடாத காசோலையை ஏற்க மறுத்த ராகுல் ராவிட்டின் பெருந்தன்மை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் ராவிட், ஐபிஎல் அணியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். அணிகள் ராகுல் ராவிட்டை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்தன. அவர் ஏற்கனவே விளையாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, ராகுல் ராவிட் எங்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கையெழுத்திடாத காசோலை
இதற்கிடையே ராகுல் ராவிட்டை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணுகியபோது, கையெழுத்திடாத காசோலையை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ராகுல் ராவிட்டுக்கு கொடுக்க முன்வந்துள்ள நிலையில், அதை ராகுல் ராவிட் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் அணிக்கு மீண்டும் திரும்புவதை விரும்பியதாலும், இதை ஒரு உணர்ச்சிகரமானதாக எடுத்துக் கொண்டதாலும் அந்த நன்கொடையை நிராகரித்துள்ளார்.
அணியின் ஆலோசகராகவும் கடமை
ராகுல் ராவிட் 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்றபின், இரண்டு சீசனில் அந்த அணியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |