ராகுல் காந்தி யாத்திரை - 'பாஜக'வுக்கு மிரட்டலா..! கடுமையான விமர்சனம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்க ஒருவர் வேண்டும் என்ற போதிலும், அதற்கு ராகுல் காந்தி சரியான நபர் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோரியா எட்வேர்ட் மன்றம், தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக சென்றிருந்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நடைபயணமா? நடை பயிற்சியா?
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் கன்னியாகுமர் முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டுவரும் நிலையில், அவர் மேற்கொள்வது நடைபயணம் அல்ல நடை பயிற்சியையே எனவும் சீமான் விமர்சித்துள்ளார்.
இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்து மாற்றத்தை கொண்டு வராத ராகுல் காந்தி, நடை பயணம் மேற்கொண்டு என்ன மாற்றம் வரப்போகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் நிமிடத்திற்கு நிமிடம் உழைப்பதாக மதுரையில் தெரிவித்த கருத்தையும் விமர்ச்சித்த சீமான், முதல்வர் உழைக்கின்றார் என்பதை பொதுமக்கள் கூற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தமிழக முதல்வரை விமர்ச்சித்த சீமான்
குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்திற்கோ நிதி வலிமை, நிதி ஆதாரம் இல்லை எனக் கூறினார்கள் எனக் கூறிய அவர், கல்லூரி மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்க 696 கோடி எப்படி வந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
70 சதவீத பிரச்சினைகளை சரி செய்து விட்டோம் என முதல்வர் தெரிவிப்பதாக குறிப்பிட்ட சீமான், 8 பிரச்சினைகளையாவது தீர்த்தார்களா என்பதே கேள்வியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

