மருத்துவர்களை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் குதிக்கப்போகும் மற்றுமொரு தரப்பு
இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்க்கப்படாத பல கோரிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது.
திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் இடைக்கால விதிமுறைகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை
ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.

பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் ஜனவரி 23 ஆம் திகதிக்குப் பிறகு தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கும் என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை
இதேவேளை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வெள்ளிக்கிழமை (23) முதல் நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

நேற்று (19) நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக GMOA தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |