தொடருந்து சாரதிகள் வேலைநிறுத்தம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
தொடருந்து தொழிற்சங்கங்கள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்த வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளன.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane )மற்றும் தொடருந்து சாரதிகளுடனான கலந்துரையாடல் இன்று (10) போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் பின்னரே தொடருந்து தொழிற்சங்கங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
தொழிற்சங்க நடவடிக்கை
இதேவேளை தொடருந்து இயந்திரப் பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தொடருந்து சேவைகள் இரத்து
இந்தப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக நேற்றைய தினம் 50ற்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
எனினும், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும், நீண்ட தூர தொடருந்து சேவைகள் மற்றும் இரவு நேர அஞ்சல் தொடருந்துகள் நேற்று வழமை போன்று இயங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |