சம்பிக்கவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தற்காலிகமாக இடைநிறுத்தம்!
கடந்த 2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த இடைக்கால தடையுத்தரவு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இடைக்காலத் தடை உத்தரவு
இந்த வழக்கிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை இந்த இடைக்காலத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்கவின் ஜீப் வாகனம் மோதி விபத்துக்குள்ளாக்கியதாக சம்பிக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக சம்பிக்க மீது குற்றம் சுமத்தப்பட்ட போதும், விபத்தின் போது வாகனத்தின் சாரதியாக இருந்தது தனது சாரதி என சாரதியை சம்பிக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.
பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் டிசம்பர் மாதம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் மீண்டும் சட்டமா அதிபரினால் கவனக்குறைவினால் ஒரு தனி நபருக்கு கடுமையான காயங்கள் விளைவிக்கப்பட்டுள்ளதாக சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தற்போது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்