நிலத் தகராறால் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: அனுராதபுரத்தில் சம்பவம்
Anuradhapura
Sri Lanka Police Investigation
Crime
Murder
By Sindu
அனுராதபுரம், ராஜாங்கனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட யாய 15 பகுதியில் கூரிய ஆயுதம் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது நேற்று (07) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத் தகராறு தொடர்பி்ல் இரு தரப்பினருக்கு இடையிலான வாக்குவாதம் முற்றியதன் விளைவாகவே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ஏழு பேர் கைது
இந்நிலையில் உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 51 வயது நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒரு பெண் சந்தேக நபரும் 20 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆறு ஆண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜாங்கனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |