ராஜபக்சர் - மைத்திரியுடன் ஒரே மேசையில் உணவருந்திய ஆளும் தரப்பினர்
இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை நினைவுகூரும் வகையில், சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (26) மாலை கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பிற அதிகாரிகள் சிறப்பு அழைப்பாளர்களை வரவேற்றனர்.
விசேட நிகழ்வு
சிறப்பு அழைப்பாளர்களாக பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, பல கட்சித் தலைவர்கள், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளும், ஜே.வி.பி தரப்பின் டில்வின் சில்வாவும், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் ஒரே மேசையில் அமர்ந்து உணவருந்துவது முக்கியத்துவம் பெற்றிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |