ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்கப்படவேண்டும்: ரணிலின் சகா ஆதரவு
முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மராசிங்க, ராஜபக்ச குடும்பத்தினர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும்,அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
"ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட வேண்டும், ரணில் இதை எதிர்க்கிறார், அஷு இந்த நோக்கத்தை ஆதரிக்கிறார்," என்று அவர் கூறியுள்ளார்.
"நல்லாட்சி" அரசாங்கத்தை அமைப்பதில் ஐ. தே. க ஆற்றிய பங்களிப்பு
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு "நல்லாட்சி" அரசாங்கத்தை அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி ஆற்றிய பங்கை நினைவு கூர்ந்த மாரசிங்க, "நாங்கள் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வந்தோம்," என்றும் தெரிவித்தார்.

மேலும், அக்காலத்தில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்த அரசியல் சமநிலை குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். "தராசுகள் ஒன்று சேர்ந்தபோது எட்டப்பட்ட சமநிலையை நாங்கள் அறிவோம்," என்றும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |