EPDP செய்த கொலைகள் அம்பலப்படுத்தப்படும்...! கடுமையாக எச்சரித்த அநுர தரப்பு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) செய்த கொலைகள், கடத்தல்கள், கப்பம், ஊழல் தொடர்பிலும் அம்பலத்துக்கு வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எச்சரித்துள்ளார்.
அத்துடன் அதை நீதித்துறை செய்யும் என்றும் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை (30) வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் ந. திருலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.
நியமனக் கடிதங்கள்
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் கலந்து கொண்டு, சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்ததுடன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த மொத்தம் 35 பேருக்கான நியமனக் கடிதங்கள் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.
வறுமை ஒழிப்பு, சமூக மேம்பாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை அடித்தள மட்டத்தில் வலுப்படுத்தும் நோக்குடன் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நியமனம் பெற்ற குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |