முடக்கப்படும் சொத்துக்கள்: தலைமறைவாகியுள்ள ராஜிதவுக்கு இறுதி அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறினால் அவரின் சொத்துக்கள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜிதவின் சொத்துக்களை முடக்க நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிடியாணை
இந்த நிலையில், அவரின் சொத்துக்கள் குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட காணிப் பதிவு அலுவலகங்கள் மற்றும் அவர் வசிக்கும் வீடுகளின் பிரதேச செயலகங்களிலிருந்து பெறப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கொரிய நிறுவனத்திற்கு சர்ச்சைக்குரிய ஒப்பந்தமொன்றை வழங்கி அரசுக்கு ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ராஜிதவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவு
இவ்வாறானதொரு பின்னணியில், ராஜித சேனாரத்ன ஒரு மாதத்திற்கும் மேலாக நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதாக லஞ்ச ஒழிப்பு ஆணையம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு "பிரகடன உத்தரவை" பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 5 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்