இறுதிப் பிரகடனம் வாசிக்கப்பட்ட போது குழப்பம் - முறியடித்த மாணவர்கள் (காணொளி)
இரண்டாம் இணைப்பு
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய உரிமைப் பேரணியினரின் இறுதிப் பிரகடனம் வாசிக்கப்பட்ட போது குழப்பம் விளைவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் கிழக்கு பல்கலை மாணவர்கள் அதனை முறியடித்து அங்கு வந்த இளைஞர்களை வெளியேற்றியுள்ளனர்.
ஈழத் தமிழரின் தலைவிதியை ஈழத் தமிழரே தீர்மானிக்கும் நிரந்தர அரசியல் தீர்வு - வெளியானது பிரகடனம்!
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி முடிவிடத்தில் திடீர் மாற்றம் - பிரகடன அறைகூவலுக்கு தயாராகிறது பெவர் மைதானம்!
முதலாம் இணைப்பு
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய உரிமைப் பேரணியினரின் இறுதிப் பிரகடனம் மட்டக்களப்பு - வெவர் மைதானத்தில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வெவர் மைதானத்திற்குள் பேரணி உள்நுழையாத வகையில் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் பாதுகாப்பு தடையை தகர்த்து உள்நுழைந்த இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இறுதிப்பரகடனத்திற்கான ஏற்பாடுகளை மைதானத்திற்குள் செய்துவருகின்றனர்.
பேரணியில் செல்வோரும், ஏற்பாட்டுக்குழுவும் எவ்வாறான தடை வந்தாலும் அதனை உடைத்துக்கொண்டு வெவர் மைதானத்திற்குள் உள்நுழைந்து இறுதி நிகழ்வை மேற்கொள்வோம் என உறுதி பூண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய பதிவுகள்





தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
