விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட ராமர் பாலத்தின் படம்
விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா (India)- இலங்கை(Sri lanka) இடையிலான ராமர் பாலத்தின் படத்தை ஐரோப்பிய ஏஜென்சி(European Space Agency) பகிர்ந்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீட்டர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்குத் தீவுப்பகுதியான ராமேஸ்வரம் தீவிலிருந்து, இலங்கையின் மன்னார் தீவுப்பகுதிக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது.
இந்த்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது.
ராமர் பாலம்
இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, இந்த "இயற்கையான பாலம் 15 ஆம் நூற்றாண்டு வரை பயணிக்கக்கூடியதாக இருந்தது, அதன் பிறகு அது பல ஆண்டுகளாக புயல்களால் படிப்படியாக அரிக்கப்பட்டது" என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியது.
பாலம் எப்படி உருவானது என்பது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும், புவியியல் சான்றுகள்படி இந்த சுண்ணாம்புக் கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் கூறுகின்றன.
? This week's @ESA_EO #EarthFromSpace is a @CopernicusEU #Sentinel2 image of Adam’s Bridge, a chain of shoals linking India and Sri Lanka. pic.twitter.com/Zo584h9KhK
— European Space Agency (@esa) June 21, 2024
இந்தியா - இலங்கை
ராமர் பாலத்தில் இருக்கும் மண் அமைப்புகள் உலர்ந்து காணப்படுகிறது.
இங்கு கடலின் ஆழமே ஒன்று முதல் 10 மீட்டர் வரைதான் உள்ளது என ஐரோப்பிய ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), ராமர் சேதுவின் தொடக்கப் புள்ளியான அரிச்சல் முனைக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |