றம்புக்கண துப்பாக்கி சூடு - விசேட அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
றம்புக்கண சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் இன்று காலை கேகாலை நீதிவான் நீதிமன்றில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் நான்கு டி-56 துப்பாக்கிகளை காவல்துறையினர் பயன்படுத்தியிருப்பதாக அறிக்கை குறிப்பிடுகின்றது.
மேலும், இதன்போது, 35 தோட்டாக்களையும் காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, றம்புக்கண சம்பவம் தொடர்பில், நேரில் சென்று விசாரணை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் குழுவொன்று இன்று சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.
கேகாலை நீதவான் வாசனா நவரத்ன நேற்று பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
றம்புக்கண சம்பவம் தொடர்பில், காவல்துறைமா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன உட்பட சில சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் இன்று முற்பகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.
