எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது! (காணொளி)
India
Jaffna
Navy
rameswaram
Netuntvu
By MKkamshan
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அருகே சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இவ்வாறு சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ராமேஸ்வர மீனவர்களை கைதுசெய்துள்ளனர். இதன்போது 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்ததன் பின்னர் காங்கேசன்துறை இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 18 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி