புதிய சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க சத்தியப்பிரமாணம்
இலங்கையின் (Sri Lanka) புதிய சட்டமா அதிபராக சட்டத்தரணி கே.ஏ.பரிந்த ரணசிங்க ( K.A. Parinda) நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அரசியலமைப்பின் “61இ (ஆ)” சரத்தின் பிரகாரம் அதிபர் செயலகத்தில் சற்று முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னிலையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக் காலத்தை மேலும் 06 மாதங்களுக்கு நீடிப்பதற்கான பிரேரணை அரசியலமைப்பு பேரவையால் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டதையடுத்து, ஜூலை 01 ஆம் திகதி பதில் சட்டமா அதிபராக ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதிபரின் செயலாளர்
அந்தவகையில், முன்னாள் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை நேற்று (11) ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.
இந்தநிலையில், சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேனாவின் பதவி மூப்பு மற்றும் தகுதி இருந்தபோதிலும், பாலின சார்பு காரணமாக அவர் கவனிக்கப்படவில்லை என்று அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால், இந்த நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிபரின் செயலாளர்
எவ்வாறாயினும், இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க (Saman Ekanayake) , சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த அதிகாரியை இந்த பதவிக்கு மூப்பு அடிப்படையில் நியமிக்க அரசியலமைப்புத் தேவை இல்லை என்று வலியுறுத்தியுள்ளர்.
மேலும், அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன் சட்டமா அதிபரை நியமிக்க அரசியலமைப்பின் “41 சியின்” கீழ் அரசியலமைப்பு ரீதியாக அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |