கோட்டாவின் வழியில் அதிபர் ரணில் : சஜித் குற்றச்சாட்டு
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மை கண்டறியப்படும் எனக்கூறி ஆட்சிக்குவந்த முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, தகவல்களை மூடிமறைக்கும் முயற்சியிலேயே இறங்கினார்.
தற்போதைய அதிபரும் அதேவழியில்தான் பயணிக்கின்றார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்,பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்கள், அதில் பொதிந்துள்ள அரசியல் இலக்குகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும். அதற்காக வெளிப்படை தன்மையுடன்கூடிய சுயாதீன விசாரணை அவசியம்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை அரசிடம் கேட்டபோது, வழங்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் : சர்வதேச மாநாட்டில் அதிபர் ரணில் வெளியிட்ட அறிவிப்பு (படங்கள்)
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.