சுகாதார ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கிடைக்கப்போகும் கொடுப்பனவு
சுகாதார ஊழியர்களுக்கு 'DAT' கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச சேவை தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நேற்று (16) தெரிவித்தார்.
அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த கொடுப்பனவுகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பது தொடர்பில் எதிர்வரும் 19ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.
ரணிலின் பணிப்புரையால் மகிழ்ச்சி
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா 'டட்' கொடுப்பனவைக் கோரி தமது தொழிற்சங்கம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும், உரிய கொடுப்பனவுகளை அனைவருக்கும் வழங்குவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.
அதிபரிடமிருந்து நல்ல பதில் கிடைத்தது. இது தொடர்பில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சுகாதார செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு
குறைந்தபட்சம் 20,000 DAT கொடுப்பனவை வழங்குமாறு கோரினோம். 25,000 சீருடை கொடுப்பனவும் கோரப்பட்டது. மேலதிக நேரம் குறித்தும் பேசப்பட்டது.
சுகாதார ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |