ரணிலோடு முட்டிக்கொள்ளப்போகும் மகிந்த - ஆட்டம் ஆரம்பம்..! செய்திகளுக்கு அப்பால்
ராஜபக்சர்களும், ரணிலும் முட்டிமோதிக்கொள்ளவார்கள் என அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலில் நிலை கொள்வதற்காய் ராஜபக்சர்கள் ரணிலையும், தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தி கொள்ள ரணில் ராஜபக்சர்களையும் பயன்படுத்தி வருகின்றார்கள், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சந்தர்ப்பத்தில் இருவரும் முட்டிமோதிக் கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபராகும் வரை நடைமுறையில் இருக்கும் சிறிலங்கா அதிபருக்கான அதிகாரங்களை குறைப்பதாக கூறும் எவரும் அதிபராகிய பின் அவ்வாறு நடப்பதில்லை எனவும் ரணிலும் அதற்கு விதிவிலக்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் அதிபராக பதவியேற்றத்தின் பின் நடந்திருக்க கூடிய செயற்பாடுகள் அதற்கு ஆதாரம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரு குணரட்ணம் கலந்து கொண்ட செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி
பகுதி 1
பகுதி 2


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்