எதிர்க்கட்சிகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்தும் ரணில்...! தண்டனைக்கு பயந்து புதிய அரசியல் தஞ்சம்
நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனநாயக தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ச குமார இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய குற்றச்சாட்டுக்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ரணில் விக்ரமசிங்க மீது நிதி முறைகேடு தொடர்பான பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
நீதிமன்ற விசாரணைகளின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் இலங்கை வரலாற்றிலேயே தண்டனை பெற்ற முதல் முன்னாள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மாறுவார்.

அந்தத் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆகியோரை பகடைக் காயாக ரணில் பயன்படுத்தி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீதியை உருவாக்கி மீண்டும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிக்க முயற்சிக்கின்றார் என்று ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கரவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |