இந்திய கடற்பகுதியில் 24 பணியாளர்களுடன் மூழ்கிய சரக்குக் கப்பல்! மீட்பு பணிகள் தீவிரம்
இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் பனாமா கொடி எந்திய 'ஓஷன் வின்னர்' (Ocean Winner) என்ற சரக்குக் கப்பல் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியக் கடலோரக் காவல்படைத் தகவல்களின்படி, அதனுடனான தொடர்பை இந்தியக் கடல்சார் மீட்பு முகமை இழந்துள்ளளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், உயிர்காப்புப் படகுகளில் இருந்த இருவர் இதுவரை கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூழ்கியதற்கான காரணம்
இந்தியக் கடலோரக் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டன்ட் அமித் உனியல் அளித்த தகவலின்படி, இக்கப்பலில் 20 சீனர்கள், 3 மியான்மர் நாட்டவர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவர் உட்பட மொத்தம் 24 பணியாளர்கள் இருந்ததுள்ளனர்.

image Credit: Odisha Bytes
இரும்புத் தாதை ஏற்றிச் சென்றபோதே இக்கப்பல் இந்த விபத்தை சந்தித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |