நிலத்தடி ஏவுகணை உற்பத்தி தளத்தை பார்வையிட்டார் ஈரான் தளபதி
ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி,இன்று(22) சனிக்கிழமை நாடு பாதுகாப்புத் தொழில் தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு ஆயுதங்களைத் தயாரிக்கும் ஒரு நிலத்தடி தளத்தைப் பார்வையிட்டார் என அரை அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்தி வெளியிட்டது.
ஈரானின் பாதுகாப்புத் தொழில் தினத்துடன் ஒத்துப்போகும் வகையில், ஓகஸ்ட் 22 அன்று மேஜர் ஜெனரல் அப்தொல்லாஹி அந்த நிலத்தடி உற்பத்தி ஆலையைச் சுற்றிப் பார்த்தார்.
பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி
மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களையும் அவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, ஈரானின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மஜித் இப்னு அல்-ரெஸா, ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுடன் சென்றிருந்தார்ம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |