ரணிலுக்கு பிரிட்டனில் இருந்து வந்த செய்தி (படம்)
பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கு பிரித்தானியா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (25) இடம்பெற்றது.
இதன்போது தமது விருப்பத்தை வெளியிட்ட அவர், அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சர்வதேச நிதிக்கட்டமைப்புக்களின் நிதியுதவி உள்ளடங்கலாக நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்திய திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் சந்திப்பின்போது நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்திய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகிறது.
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்