ரணிலின் வழக்கு விசாரணை! பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விசேட தகவல்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நீதிமன்ற விசாரணையில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இன்று கலந்து கொண்டதாகக் கூறப்படும் செய்திகளை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
ஒரு அறிக்கையில், உயர் ஸ்தானிகராலயம் அத்தகைய கூற்றுக்கள் தவறானவை என்று கூறியதுடன், உயர் ஸ்தானிகர் மற்றும் தூதரகத்தின் நடவடிக்கைகள் குறித்த துல்லியமான புதுப்பிப்புகளுக்கு அதன் அதிகார பூர்வ கணக்கை மட்டுமே பார்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
Please refer to this account or the High Commissioner’s official handle @AndrewPtkFCDO for accurate updates on the activities of the High Commission and High Commissioner. Claims that the High Commissioner attended former President Wickremesinghe’s court hearing today are false.
— UK in Sri Lanka 🇬🇧🇱🇰 (@UKinSriLanka) August 26, 2025
முதலாம் இணைப்பு
ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நீதிமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில சமூக ஊடக கணக்குகள் இதனை மேற்கோள் காட்டியுள்ளன.
எனினும் இது தொடர்பிலான உத்தியோகப்பூர்வ தகவல்கள் எனதனையும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிடவில்லை.
எனினும் இன்று எதிர்க்கட்சி தலைவர் பிரித்தானிய உயர் ஸ்தானிகருடன் விசேட சந்திப்பை மேற்கொண்டுள்ள பின்னணியில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிரான வழக்கு இன்று (26) பிற்பகல் 1.00 மணிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) அவரது உடல்நிலை காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, நீதிமன்றம் தெரிவித்தால், இன்று (26) நடைபெறும் நடவடிக்கைகளில் அவரை zoom மூலம் இணைக்க சிறைச்சாலைகள் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

