அரசியலமைப்பு பேரவையால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பரிந்துரையை அதிபரால் செயற்படுத்த முடியாது : ஜி.எல் பீரிஸ்

G. L. Peiris Ranil Wickremesinghe Sri Lanka
By Beulah Oct 23, 2023 05:29 PM GMT
Report

காவல்துறைமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள சேவை கால நீடிப்பை இனி தொடர முடியாது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழில் வெளியிட்ட அறிவிப்பு(படங்கள்)

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழில் வெளியிட்ட அறிவிப்பு(படங்கள்)

அரசியலமைப்பு பேரவை

“அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரை மற்றும் அனுமதிக்கு அமையவே சுயாதீன ஆணைக்குழுக்கள் உட்பட முக்கிய அரச உயர் பதவிகளுக்கான நியமனங்களை அதிபர் வழங்க வேண்டும்.

அரசியலமைப்பு பேரவையால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பரிந்துரையை அதிபரால் செயற்படுத்த முடியாது : ஜி.எல் பீரிஸ் | Ranil Constituent Assembly G L Peiris

அரசியலமைப்பு பேரவையால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பரிந்துரையை அதிபரால் செயற்படுத்த முடியாது.

காவல்துறைமா அதிபர் நியமனம் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. எமது அரசியல் அனுபத்தில் இவ்வாறான இழுபறி நிலையை முன்னொருபோதும் கண்டதில்லை.

காவல்துறைமா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவி காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவு பெற்றது.

புதிய காவல்துறைமா அதிபர் நியமனம் இழுபறி நிலையில் இருந்ததால் சி.டி.விக்கிரமரத்னவுக்கு இரண்டு முறை சேவைகால நீடிப்பு வழங்கப்பட்டது.

அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் காவல்துறைமா அதிபருக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு 2023.10.09 ஆம் திகதியுடன் நிறைவுப் பெற்றது.

காவல்துறைமா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்குமாறு அதிபர் முன்வைத்த பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொள்ளவில்லை.

புதிய காவல்துறைமா அதிபரின் பெயரை பரிந்துரைக்குமாறு அரசியலமைப்பு பேரவை அதிபருக்கு அறிவுறுத்தியது.

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையை புறக்கணித்து முறையற்ற வகையில் காவல்துறைமா அதிபருக்கு மூன்றுவார காலம் சேவை கால நீடிப்பை அதிபர் வழங்கியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் அதிபர் செயற்படுவது வெறுக்கத்தக்கது.

தேர்தல் முறைமை திருத்தம்

நாடாளுமன்றத் தேர்தல் முறைமையை திருத்தம் செய்வது தொடர்பில் நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து பிரதமர் தலைமையில் கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

அரசியலமைப்பு பேரவையால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பரிந்துரையை அதிபரால் செயற்படுத்த முடியாது : ஜி.எல் பீரிஸ் | Ranil Constituent Assembly G L Peiris

இந்த பேச்சுவார்த்தையை சகல எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தன. ஒருசில எதிர்க்கட்சிகள் மாத்திரம் கலந்துக் கொண்டு தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் நகர்வுகளை வன்மையாக கண்டித்துள்ளன.

தேர்தல் முறைமை திருத்தம் எவ்வாறான பெறுபேற்றை வழங்கும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.பெண் பிரதிநிதித்துவத்தில் திருத்தம் செய்தாக குறிப்பிட்டுக் கொண்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்வைத்த யோசனையால் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வரையறுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது உள்ளுராட்சிமன்றத் தேர்தலும் காணாமலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் நாடாளுமன்றத் தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்றத் தேர்தலை பிற்போடும் உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை அனைவரும் நன்கு அறிவோம்.

2024 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தல் நிச்சயம் இடம்பெற வேண்டும். அதிபர் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் மறைமுகமாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை இரத்து செய்ய வேண்டும் என்ற யோசனையை ஆளும் தரப்பின் ஒருசில உறுப்பினர்கள் முன்வைத்தார்கள்.

அந்த முயற்சிக்கு நீதிமன்றம் தடையாக அமையும் என்பதை அரசாங்கம் உணர்ந்துக் கொண்டதால் அதிபர் தேர்தல் 2024 ஆம் ஆண்டு இடம்பெறும் என்று குறிப்பிடும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026