அமெரிக்காவின் தொடர் தாக்குதல்கள்...! ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில் அமெரிக்கா நடத்தியுள்ள சமீபத்திய தாக்குதல்களை ஈரான் கண்டித்துள்ளது.
அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு இது குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) விவரிக்கப்பட்டுள்ள போர்நிறுத்த உடன்பாட்டை அமெரிக்காவின் இந்த கொடிய தாக்குதல்கள் முற்றிலும் மீறியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தேசிய இறையாண்மை
இந்தத் தாக்குதல்களானது அமெரிக்கா தனது வாக்குறுதிகளை எள்ளளவும் மதிப்பளிப்பதில்லை என்பதை நிரூபித்துள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், வாக்குறுதிகளை மீறுவது என்பது இந்த (அமெரிக்க) அரசாங்கத்தின் இயல்பான குணமாகும் என்றும் ஈரான் சாடியுள்ளது.
அமெரிக்காவின் இந்த இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தனது தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாக வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்