நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க ரணில் கடும் முயற்சி -தொடரும் சந்திப்புகள்
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர் சமூகத்தினரின் ஆதரவும் கோரப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றும் இன்றும் பல இராஜதந்திரிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கான கொரிய தூதுவர், ஐக்கிய இராச்சியத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர், பிரான்ஸ் தூதுவர், இத்தாலிய தூதுவர், நோர்வே தூதுவர், ஐரோப்பிய ஒன்றிய தூதுவர், ஜேர்மன் தூதுவர், சுவிஸ் தூதுவர், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், கனடா மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
"பல நட்பு நாடுகளின் தூதர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளை நான் சந்தித்துள்ளேன். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் நாம் அந்த நாடுகளுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தி பொருத்தமான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
