ஜனாதிபதித் தேர்தல் திகதியில் உறுதியாக இருக்கும் ரணில்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலை முன்னெடுப்பதற்கு தாம் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஹோமாகம (Homagama) பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் என்பது மக்களின் இறைமையின் ஒரு அங்கம், அது மீறப்படாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21 ஆம் திகதி நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் கூறியுள்ளார்.
பூரண ஆதரவு
மேலும், அரசியலமைப்பின் 106 ஆவது சரத்தின் பிரகாரம் சுதந்திரமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில், அதற்கு பூரண ஆதரவை வழங்குவது அனைவரினதும் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவத்து அவர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் 2022 - 2023 ஆம் ஆண்டுகளுக்கான சிறுபோகத்தில் விவசாயம் செய்த விவசாயிகளின் பணத்தினால் இன்று நாம் இங்கு இருக்கிறோம் என்று கூற வேண்டும்.
தேர்தல்
அந்த இரண்டு குழுக்களும் இல்லாமல், இன்று நாம் ஒரு நாடாக இவ்வளவு வெற்றிகரமாக முன்னேறி இருக்க முடியாது.
நாம் மீண்டும் ஒரு நாடாக உயர முடியாது என்று சிலர் நினைத்தார்கள். தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை, நாடு சர்வாதிகாரத்திற்கு செல்லும் என்றும் கருதப்பட்டது.
இப்போது தேர்தலை நடத்துகிறோம். நான் தேர்தலை தள்ளிப்போடப் போகிறேன் என்று மற்றவர்கள் நினைத்தார்கள். ஆனால் சரியான நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக முதலில் சென்று கட்டுபணத்தை செலுத்தினேன்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |