ரணிலின் அரசியல் நாடகத்திற்கு தமிழர்கள் ஏமாந்து வாக்களிக்கமாட்டார்கள் - ஜே.வி.பி!
Sri Lankan Tamils
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
President of Sri lanka
Sri Lankan political crisis
By Pakirathan
"தமிழர்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக ரணில் விக்ரமசிங்க அரசியல் நாடகம் நடத்துகின்றார், அதற்கு ஒருபோதும் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள்.
அவரைப் பற்றி நன்றாகவே தமிழர்களுக்கு தெரியும், அதனால் அவருக்கு ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள்."
இவ்வாறு, ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ரணிலின் அரசியல் நாடகம்
தொடர்ந்து அவர்,
"அரசியல் தீர்வு எனும் பெயரில் ரணில் முன்னெடுக்கும் சர்வகட்சி பேச்சுவார்த்தைகள் எல்லாம் ஒரு அரசியல் நாடகம், தமிழர்களின் வாக்குகளை சேகரிப்பதற்கான முயற்சிகள்.
இதேவேளை, தென்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தி இனவாதத்தை தூண்டுவதற்கு ரணில் முயற்சிக்கிறார்.
அது ஒருபோதும் நடக்காது, சிங்கள மக்களும் இவ்வாறான கீழ்த்தரமான இனவாதத்திற்கு ஏமாற மாட்டார்கள்." இவ்வாறு சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி