அதிபர் ரணில் வீட்டிற்கு தீ வைத்த குற்றவாளி கைது : விரைந்து செயற்பட்ட புலனாய்வுப்பிரிவு
CID - Sri Lanka Police
Ranil Wickremesinghe
Fire
By Kathirpriya
அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது சொந்த வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் களுத்துறை தெற்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 19 ஆம் திகதியன்று, கொள்ளுப்பிட்டியிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை ஹென்டியங்கல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி