பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும்! ரணில் பகிரங்கம்
2023 ஆம் ஆண்டு நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2018ம் ஆண்டு நாடு எவ்வாறான நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு செல்வதற்கு 2026ம் வருடம் வரை காத்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
செலுத்த வேண்டிய கடன்
- 2022 ஜூன் முதல் டிசம்பர் வரை 3489 மில்லியன் டொலர்,
- 2023ல் 5.8 பில்லியன் டொலர்,
- 2024ல் 4.9 பில்லியன் டொலர்,
- 2025ல் 6.2 பில்லியன் டொலர்,
- 2026ல் 4.0 பில்லியன் டொலர்,
- 2027ல் 4.3 பில்லியன் டொலர்,
2027ஆகும் போது நாங்கள் மொத்தமாக 28 பில்லியன் டொலர் செலுத்தவேண்டி இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நாட்டின் அபிவிருத்திக்காகவே சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆனால் இம்முறை வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை மீட்டெடுப்பதற்காகவே பேச்சுவாரத்தை நடாத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
