பேரினவாத சக்திகளுக்கு அஞ்சும் ரணில் - சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
அதிபர் ரணில் விக்ரமசிங்க ''தான் ரணில் ராஜபக்ச இல்லை'' என்று சொல்வது அவரது இயலாத் தன்மையை காட்டுவதாகவும், பௌத்த பேரினவாத சக்திகளுக்கு அஞ்சுவதை வெளிப்படுத்துவதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ரணிலின் சந்திப்பு தொடர்பில் கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச பல்வேறுபட்ட சர்வதேச மட்டங்களில், நான் 13க்கு அப்பாற் சென்று தீர்வு கொடுப்பேன் என்பதை திரும்ப திரும்பச் சொல்லி இருக்கின்றார்.
நீங்கள் ரணில் விக்ரமசிங்க என்பது எங்களுக்கு தெரியும். 13ஆவது சீர்திருத்தத்தில் என்ன இருக்கிறது என்பதுவும் எமக்கு தெரியும்.
நாடாளுமன்றத்திற்கு திரும்பச் சென்று ஒரு சட்டம் கொண்டுவரத் தேவையில்லை என்பதுவும் எமக்கு தெரியும். ஆகவே 13ஐ நடைமுறைப்படுத்தும்படி நாங்கள் சொல்கிறோம்.
ரணில் விக்ரமசிங்க இப்படியான கருத்துக்களை சொல்லி, நாடாளுமன்றம் செல்ல வேண்டும், ஒப்புதல் எடுக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம், அவர் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கு அச்சப்படுகின்றார் என்பதை தான் காட்டுகிறது என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை மதியநேர செய்திகளின் தொகுப்பில் காண்க,