ரணில் குற்றவாளி இல்லை.! வார்தையை விடும் என்.பி.பி அமைச்சர்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை ஒரு குற்றவாளியாக கருதப்படவில்லை என அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
ரணிலை கைது செய்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்தது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
26 ஆம் திகதி என்ன நடக்கும் என்பதில் பொதுமக்களின் கவனம் தற்போது குவிந்துள்ளதாக கூறிய அமைச்சர், அன்று பிணை வழங்கி சட்ட நடவடிக்கையை தொடர்தல் அல்லது பிணை வழங்காமல் இந்த விடயத்தை விசாரித்தல் என இரண்டு விடயங்கள் இடம்பெறலாம் என்றும் கூறியுள்ளார்.
எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எச்சரிக்கை
எவ்வாறாயினும், இந்த சட்ட நடவடிக்கைகளில் தான் தலையிட மாட்டேன் என்றும், அத்தகைய தலையீடு பொருத்தமற்றது மற்றும் தவறானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த நேரத்தில் குறித்த விடயத்தை பற்றி பேசுவது கூட பொருத்தமானதல்ல என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், "வழக்கின் தீர்ப்பு பெலவத்தை அலுவலகத்தில் எழுதப்பட்டது" என்று கூறி சில தரப்பினர் செயல்படுவதாகவும், அத்தகைய அறிக்கையை வெளியிடும் நபர் மீது நீதிமன்றம் தலையிட்டாலோ அல்லது யாராவது முறைப்பாடு அளித்தாலோ, அந்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் சட்டம் செயல்படுத்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் முன்பு போல பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என அமைச்சர லால் காந்த வலியுறுத்தியுள்ளார்.
தற்போது சட்டத்தின் ஆட்சி நிலவுவதால், பொறுப்புள்ள குடிமக்களாக அவர்களின் அறிக்கைகள் குறித்து கவனமாக சிந்திப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 13 மணி நேரம் முன்
